அர்த்தநாரி

சூல் கொள்ளும் வயிற்றையும்,
அமுதூறும் அவயங்களையும்
அவன் ஆணுக்கு அளிக்கவில்லை.

காதோடு இதழ்தொட
பேசுவதே களிப்பென
அருளவில்லை..

பருகப்படுவதற்கான புன்னகையும் அளிக்கவில்லை .

கனிவதன் மூலமே
கடப்பதன் கலையை
கற்பிக்கவில்லை.

அளிப்பதன் வழியாக
அடைந்து நிறைவுரும் அறிவையும் கொடுக்கவில்லை .

பாதகன் தன்பிழையாலே
தானே ஏங்கி
அர்த்தநாரி ஆனானோ.

கண்னா

2 thoughts on “அர்த்தநாரி”

  1. May be OK for your family.
    Cant generalize.
    (நானே கடுப்புல இருக்கேன்)

  2. கண்னா, புரியல! உன் சொற்சிலம்பாட்டம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *