கொண்டாட்டம்
நிகழ்வது
நிலாவின் திருமணமா
கோல்டன் ஸ்டான்லியன்
சந்திப்போ என்று
உளமயக்கம் வந்தது
அடிக்கடி.
தோழமைகளுடன் அளவளாவிய
இரு தினங்கள்
கொண்டாட்டம்.
நட்பாட்டம்
ஸ்டான்லி அலுமினிடேயோ
இன்று என்றும் தோன்றியது.
சீனியர் ஜூனியர்
ஸ்டான்லிமக்களுடன்
உரையாடியது நட்பாட்டம் .
களியாட்டம்
மணமக்களுடனும் தோழ
தோழியருடனும் ஆடலும்
பாடலும் நடமிட்டது
களியாட்டம்.
திண்டாட்டம்
ஐந்து நிமிடம் பேசியபின்
நீ தேனி தானே மணிமொழி
என்று கேத்தரினைக் கேட்டேன்.
கிடைத்த முறைப்பு
திண்டாட்டம்.
எழிலாட்டம்
மயில் தோகையில் அலங்கரிக்கப்பட்ட
மணமேடை அழகு.
மயில் தோகையின்
கண்கள் என அமைந்த
மணமாலையும் ,
சூடிய மணமக்களும்
பேரழகு.
சொற்சிலம்பாட்டம்
அய்யர் ஹோமம்
அம்மி அருந்ததி
அல்லாமல், எம்
அருமைக்காரர்
அய்யன் தலைமையில்
அரசாணிக்கால் நட்டு
மணவிழாவும்,
மங்களமாய்
முதல்வாழ்த்து
நாவிதன்பாடிய
மங்கலவாழ்த்து ,அது
கம்பர் இயற்றி
எமக்கு அருளியது…
கொங்குச் சிறப்பென
தோழர்கள் அனைவருக்கும்
நான் விரித்துப் பேசி
ஆடியது சொற்சிலம்பாட்டம்.
வாழ்த்துப்பா
மணமக்கள்
தீபிகா ராஜேஷ்
வாழ்க வாழ்க ..
பல்வகை நலனும்
பாங்குறப் பெற்று
பல்லாண்டு வாழ்க.
விருந்தோம்பல் வித்தகன்
அன்பு மாப்பிள்ளை அருள்
வாழ்க வாழ்கவே.